Ticker

6/recent/ticker-posts

இடம் பெயா்ந்த மன்னார் மக்களின் வாக்குகளை தடுக்க முயற்சி! பின்னணியில் புத்தளம் அரசியல்வாதி!

புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் மன்னார் மாவட்ட மக்களில் சுமார் 20,000 பேர் இன்றைய தேர்தலில் வாக்களிப்புக்குச் செல்வதை தடுப்பதற்காக புத்தளம்  அரசியல்வாதியொருவா் முயற்சித்து வருவதாகவும், பொதுமக்கள் அச்சுறுத்தப் படுவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடம் பெயா்ந்து புத்தளத்தில் வாழும் மக்களை அங்கிருந்து மன்னாருக்கு அழைத்துச் செல்வதற்காக தேர்தல் ஆணையாளர் 20 பேரூந்துகளை ஏற்பாடு செய்து கொடுத்திருந்ததோடு முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தரப்பு 200 பேரூந்துகளை ஏற்பாடு செய்திருந்ததாகவும் எனினும் புத்தளம் ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் அங்குள்ள சாரதிகளை அச்சுறுத்தி அவர்களின் பிரயாணத்தை தடுத்து வருவதாகவும் அறிய வருகிறது.

Post a Comment

0 Comments