Ticker

6/recent/ticker-posts

அனந்தியை மிரட்டினாரா மாவை? மயக்கம் போட்டு விழுந்த அனந்தி!

டமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனிற்கு தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா விடுத்த மிரட்டலையடுத்து அவர் மயங்கிவிழுந்துள்ளதாக தெரியவருகின்றது.

இன்று காலை மாவை சேனாதிராஜா அனந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திட்டியதாகவும் இந்நிலையினில் தனது தரப்பு நியாயத்தை தொடர்ந்தும் எடுத்து முன்வைத்த அனந்தி ஒரு சந்தர்ப்பத்தினில் நெஞ்சினை பிடித்தவாறு மயங்கிவீழ்ந்துள்ளார். தற்போது பாடசாலை விடுமுறை நாள் என்பதால் அவரது மூன்று சிறுபெண்குழந்தைகளும் வீட்டினில் நின்றிருந்த நிலையினில் அவர்கள் வீரிட்டு கத்தியழுதுள்ளனர்.
மாவை சேனாதிராசா, அனந்தியை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஏசியதாலேயே அவர் மயக்கம் போட்டு வீழ்ந்துள்ளதாக அவரது வீட்டில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதை அனந்தி சசிதரன் பகிரங்கமாக எதிர்த்து வந்தார்.
இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையை சேர்ந்தவர்களுக்கும் அனந்திக்கும் இடையில் கருத்து முரண்பாடு இருந்து வந்துள்ளது.
இதனையடுத்தே, மாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு அனந்தியை ஏசியுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இனப்படுகொலையாளிகளான சந்திரிகா,சரத்பொன்சேகா மற்றும் ரணிலினது கூட்டிணைவான பொது எதிரணியும் நிராகரிக்கப்படவேண்டுமெனவும் அனந்தி வாதிட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments