அமைதியானதும் வெளிப்படையானதுமான முறையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
தேர்தலின் நம்பகத் தன்மைக்கு அமைதியான சூழ்நிலை மிகவும் அவசியமானது என ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கைப் பிரஜைகள் வன்முறைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் இன்றி சுதந்திரமாக தங்களது தலைவர்களை தெரிவு செய்ய சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் ஜனநாயக மரபினை உறுதி செய்ய வேண்டிய கடப்பாடு அனைத்து தரப்பினரையும் சாரும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை ஒன்றின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.
.jpg)
0 Comments