முன்னாள் ஜனாதிபதி மிகவும் கௌரவமான முறையில் பதவி விலகிச் சென்றார் என்று
ஊடகங்கள் பறைசாற்றுகின்றன. அரச இலத்திரனியல் ஊடகங்களும் அவருக்கு ஆதரவான
சில தனியார் ஊடகங்களும்இன்னமும் மறைமுகமாக அவர் புராணம் பாடிக்
கொண்டிருப்பதை இன்றும்அவதானிக்க முடிகின்றது.
இந்நிலையில் இன்று காலை என்ன
நடந்தது என்பதுபற்றி ஆங்கில ஊடகம் ஒன்று பிந்திய தகவல் ஒன்றை
தந்துள்ளது.அதன்படி நமக்கு காட்டப்பட்டுள்ள படி மகிந்த விருப்பத்தோடும்
பெரு மனதோடும் வௌியேறவில்லை. அவர் மேற்கொண்ட கடைசிக் கட்ட முயற்சியும்
பலனளிக்காததாலேயே அவர் விட்டுவிட்டுப் போக
முடிவு செய்துள்ளார்.
முடிவுகள் வௌியாகிக் கொண்டிருந்த போது தனது தோல்வி
ஊர்ஜிதம் ஆகிவிட்டதை தெரிந்து கொண்ட அவர் நாட்டில் உடனடியாக அவசர கால
நிலையை பிரகடனம் செய்து அதன் படி தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி
நடைபெற்ற தேர்தலையும் அதன் முடிவுகளையும் இரத்துச் செய்யும் அறிவிப்பை
விடுக்க முயன்றுள்ளார்.
ஆனால் சட்டப்பிரகாரம் இந்தப் பிரகடனங்களுக்கான
அறிவித்தல் ஆவணத்தை நாட்டின் சட்ட மா அதிபரே தயாரிக்க வேண்டும். அதற்கான
உத்தரவு மகிந்தவிடம் இருந்து சட்ட மா அதிபருக்கு அனுப்பப்பட்ட போது அவர்
அதை ஏற்று செயற்பட திட்டவட்டமாக மறுத்துள்ளார். அதன் பிறகே வேறு வழியின்றி
அவர் ரணிலை அழைத்து பேசி விலகிச் செல்ல முடிவு செய்துள்ளார்.
ஏற்கனவே
சுமார் ஒரு வாரத்துக்கு முன்பே பொலிஸாரும் இராணுவ உயர் பீடமும் மகிந்தவை
கைவிட்டிருந்த நிலையிலேயே அவர் கடைசிக் கட்ட முயற்சியாக சட்ட மா அதிபரை
நாடியுள்ளார். அந்த ஆங்கில ஊடக தகவலில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றொரு
முக்கிய விடயம் இன்று அதிகாலையில் பாதுகாப்புச் செயலாளர் விமானப்படை ஹெலி
ஒன்றின் மூலம் மாலைதீவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.
சிங்கப்பூர் செல்வதுதான்
அவரின் அசல் திட்டம். ஆனால் உரிய முறைகள் பின்பற்றப்படாமல் விமானப்படை
ஹெலி ஒன்றை சிங்கப்பூரில் தரையிறக்க முடியாது என மறுப்புத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகே அவர் மாலைதீவு செல்ல முடிவு
செய்துள்ளார். மாலைதீவுக்கு எந்த விமானமும் எந்நத நேரத்திலும் செல்லலாம்
என்பது அறிந்ததே.
Mohamed Naushad

0 Comments