Ticker

6/recent/ticker-posts

ஓட்டமெடுத்த கோட்டாபய !


தேர்தல் முடிவுகள் வெளிவரத் துவங்கியவுடனேயே பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் தன் மனைவி அயோமாவுடன் மாலைதீவுக்கு சென்றுள்ளார். அத்துடன் மஹிந்த ராஜபக்சவின் மகன்மார் சீனாவுக்கு சென்றுள்ளனர்.

மஹிந்த ராஜபக்சவின் தோல்வி தொடர்பில் ரணில் விக்கிரமசிங்ஹவிற்கு நெருக்கமான ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், “மஹிந்த ராஜபக்ச தனது பெருந்தன்மையினாலேயே அதிகாரத்தை கையளிக்க முன்வந்தார் என்பதை நான் நம்பவில்லை. அவசரநிலையை பிரகடனப்படுத்தி தேர்தல் முடிவுகளை செல்லுபடியற்றதாக்கவே அவர் முயற்சித்தார். இது தொடர்பில் ஆவணங்களை தயார்படுத்துமாறு சட்டமா அதிபருக்கு கட்டளையிட்டுள்ளார். இதனை சட்டமா அதிபர் நிராகரித்த நிலையில் அவர் மூலமாகவே சுமுகமாக அதிகாரத்தை கையளிக்கும் தன் விருப்பத்தை  ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரியப்படுத்தி தன் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்குமாறும் வேண்டியுள்ளார். ”

இன்று (09) பிற்பகல் 6மணிக்கு புதிய ஜனாதிபதியாக மைத்ரீபால சிரிசேனவும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவிருக்கின்றனர். 

Post a Comment

0 Comments