வடக்கு கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தை பயன்படுத்தி வாக்கு மோசடிகளில் அரசாங்கம் ஈடுபடவுள்ளதாக பொது எதிரணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள் முறையிட்டுள்ளன.
தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பெப்ரல் அமைப்பு, மாற்றுக்கொள்கை மையம் மற்றும் தேசிய சமாதானப் பேரவை போன்ற அமைப்புக்களிடம் முறையிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக வட மாகாணத்தில் 7 இலட்சத்து 82 ஆயிரத்து 297 வாக்குகள் இருப்பதாகவும் வாக்காளா்களை அச்சுறுத்தும் வகையில் இரானுவத்தினா் அங்கு குவிக்கப்படுவதாகவும் கண்காணிப்பாளர்களிடம் முறையிடப்பட்டுள்ளது.
பொது எதிரணியின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, இராணுவத்தின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இந்த முறைப்பாடுகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு அறிவிக்கப்படுமென தேசிய சமாதானப் பேரவை தெரிவித்துள்ளது.
வட மாகாணத்தில் இராணுவத்தைப் பயன்படுத்தி வாக்கு மோஷடிகள் இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன முறையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments