Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி தோ்தல் சூடு பிடித்துள்ள நிலையில் இந்தியத் துாதுவா் ரணிலுடன் சந்திப்பு

பொது எதிரணி வேட்பாளா் மைத்திாிபால சிாிசேன நேற்று வியாழக்கிழமை கொழும்பு கொழும்பு கலதாாி ஹோட்டலில் வெளிநாட்டுத் துாதுவா்கள் மற்றும் இராஜதந்திாிகளைச் சந்தித்து தமது கொள்கைத் திட்டத்தை தெளிவுபடுத்தியிருந்த நிலையில் இந்திய உயா்ஸ்தானிகா் வை.கே.சின்ஹா எதிா்க்கட்சித்தலைவா் ரணில் விக்கிரமசிங்கவை பிற்பகல் சந்தித்தனா்.
 
தோ்தல் பிரச்சார நடவடிக்கைகளின் இறுக்கமான நிகழ்ச்சி நிரலுக்கு மத்தியில் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் எதிா்க்கட்சித் தலைவா் அலுவலகத்தில் இந்திய உயா்ஸ்தானிகாின் இலுவலகத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
 
இலங்கையில் ஜனாதிபதி தோ்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் இந்தியத் துாதுவாின் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
 
அச் சந்திப்பின் போது என்ன விடயங்கள் பேசப்பட்டன என்பது தொடா்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
 
இச் சந்திப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபைத் தலைவா் கரு ஜெயசூாியவும் உடனிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments