Ticker

6/recent/ticker-posts

தன் மீதான குற்றச்சாட்டுக்கு சம்பிக்க ரணவக மறுப்பு

அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக நேற்றைய தினம் லஞ்ச,ஊழல் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டை நிராகரித்துள்ள அவர், நான் எப்போதும் லஞ்ச,ஊழல் துஷ்பிரயோகங்களுக்கு எதிரானவன் என தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை பொறியியலார்கள் மற்றும் உயரதிகாரிகளால் ஜனவரி 6ம் திகதி ஊழியர் சம்பள உயர்வுக்கான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் தமது கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட்டமையை விசாரிப்பதற்குப் பதிலாக அவற்றை நியாயப்படுத்துவதற்கு அமைச்சர் முயல்கிறார் என தெரிவிக்கப்படுவது தவறானது எனவும் ஊழல்,மோசடிக்கான முதன்மைக் குரலாக முன்னணியில் இருந்து செயற்பட்ட தான் இது போன்ற விடயங்களை ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லையெனவும் உடனடி விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments