Ticker

6/recent/ticker-posts

அதாவுல்லா கட்சி முக்கியஸ்தர் மைத்திரி அணியில் இணைவு

மைச்சர் அதாஉல்லா தரப்பைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் தற்போது இணைந்து கொண்டுள்ளார்.

பொலநறுவை தம்பாளையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் வைத்து பொது
வேட்பாளர் மைத்திரியின் மேடையில் ஏறிய ஆரிப் சம்சுத்தீன், மைத்திரி ஆட்சியை உருவாக்குவதற்கான தனது பகிரங்க ஆதரவை தெரிவித்துள்ளார்.
கல்முனையைச் சேர்ந்த முன்னாள் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான தூதுவருமான சட்டத்தரணி மர்ஹூம் சம்சுதீனின் புதல்வரான ஆரிப் கடந்த மாகாண சபைத் தேர்தல் மூலம் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக தெரிவானார்.
அதற்கு முன்னதாக சுனாமி நிவாரணக் குழுவிலும் அங்கத்துவம் வகித்து, அதன் மூலம் தனது செல்வாக்கை பொதுமக்கள் மத்தியில் வளர்த்துக் கொண்டிருந்தார்.

அதன் மூலம் அமைச்சர் தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் மாகாண சபை உறுப்பினராகத் தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.

எனினும் தற்போதைய நிiயில் அமைச்சர் அதாஉல்லா தொடர்ந்தும் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கும் போக்கு முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து ஆரிப் சம்சுத்தீன் கட்சி மாறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments