Ticker

6/recent/ticker-posts

நாளைக்கே அரசியல் தீர்வினை வழங்கத் நாம் தயார், ஏற்றுக்கொள்ள கூட்டமைப்பினர் தயாரா? ஜனாதிபதி

னநெருக்கடிக்கு தீர்வு தேவையென்றால் நாளைக்கே அரசியல் தீர்வொன்றை வழங்க முடியும் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஆனால், தங்களது சொந்த அரசியல் இலாபங்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் குற்றஞ்சாட்டினார்.

அண்மையில் அலரிமாளிகையில் வாரப் பத்திரிகை பிரதிநிதிகளை சந்தித்து உரையாடிய போதே இந்த விடயங்களை குறிப்பிட்ட ஜனாதிபதி ராஜபக்ஷ, இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு விட்டால் தங்களுக்கு அரசியல் செய்ய முடியாது போகும் என்பதால் தீர்வொன்றை காண்பதில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் அக்கறையின்றி செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
அரசியல் தீர்வு என்று வரும் போது அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். ஆனால், அவ்வாறு அரசியல் தீர்வொன்றை பெற்றுக் கொள்வதற்கான தேவையோ, அக்கறையோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு கிடையாது என்று மகிந்த ராஜபக்ஷ இதன்போது குறிப்பிட்டார்.
‘அமெரிக்கா, இந்தியா அல்லது ஜெனீவா மூலம் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். தீர்வொன்றை காண்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆர்வம் கிடையாது. ஏனெனில், தீர்வு வழங்கப்பட்டு விட்டால் அவர்களால் அரசியல் செய்ய முடியாமல் போய்விடும்.
அதனால், தங்களது அரசியல் தேவைகளுக்கு தான் இந்த பிரச்சினைக்கு தீர்வொன்றை காண்பதற்கு முன்வராமல், பிச்சைக்காரன் புண் போல அதை வைத்துக்கொண்டிருக்கின்றனர்’ என்றும் ஜனாதிபதி ராஜபக்ஷ தமிழ்க் கூட்டமைப்பினரை சாடினார்.
உங்களது புதிய தேர்தல் விஞ்ஞாபனத்தில் இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு பற்றி எதுவும் விசேடமாக குறிப்பிடப்பட்டிருக்கவில்லையே என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments