பொலன்னறுவை - அரலஹங்வில பிரதேச பாதுகாப்பிற்காக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அரலஹங்வில பிரதேசத்தில் நேற்று இரவு இரு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் நிலையை அடுத்து ஐவர் காயமடைந்தனர்.
இதன்போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

0 Comments