மைத்ரீபால சிரிசேன இன்றைய தினமே (09) நாட்டின் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. நாடு தலைமை இல்லா நிலையில் இருக்க முடியாதென்றும் பாதுகாப்புக் காரணங்களை கருத்திற்கொண்டும் மைத்ரீபால சிரிசேன இன்றே பதவிப்பிரமாணம் செய்ய வேண்டும் என்பது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்தாகும்.
அவ்வாறு பதவிப்பிரமாணம் செய்வதாக இருந்தால், பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் முன்னிலையில் அல்லாமல் உச்ச நீதிமன்ற நீதிபதிஒருவர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொள்வார் எனவும் அறியவருகின்றது.
0 Comments