முன்னாள் முதற் பெண்மணி ஷிரந்திக்கு சொந்ததமான மாளிகாவத்தை கார்ல்டன் பாலர் பாடசாலை இன்று வியாழக்கிழமை பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பாலர் பாடசாலையில் அரசாங்கத்துக்கு சொந்தமான பொருட்களும், மஹிந்தவுக்கு எதிரான அரசியல்வாதிகளுக்கு சேறுபூசும் பிரசுரங்களும் இருப்பதாக தெரிவித்தே பொதுமக்கள் இந்த முற்றுகையை மேற் கொண்டிருந்தனர்.
எனினும் இதன்போது தலையிட்ட மாளிகாவத்தை பொலிசார், நீதிமன்ற அனுமதியின்றி குறித்த பாலர் பாடசாலையை சோதனையிட முடியாது என்று மறுத்துள்ளனர்.எனவே நீதிமன்ற அனுமதியைப் பெற்றுக் கொள்ளும் வரை குறித்த பாடசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

0 Comments