Ticker

6/recent/ticker-posts

ஒரு லீட்டர் பெட்ரோல் 1200 ரூபாய்?


எரிபொருள் கள்ளச் சந்தைகாரர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள். நாட்டின் சில பகுதிகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் இரகசியமாக பெட்ரோல் மற்றும் டீசலை 1000 ரூபா முதல் 2000 ரூபா வரை விற்பனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, அவசர பயணத்திற்கு தனக்கு எரிபொருள் கிடைக்காத காரணத்தினால்  கறுப்பு சந்தையில் 5 லீற்றர் பெற்றோலை லீற்றர் 950 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய நேரிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

சில ஒழுங்கமைக்கப்பட்ட திருட்டு வியாபார குழுக்கள் தமது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் பெற்று பின்னர் வாகனங்களிலிருந்து எாிபொருளை  அகற்றி போத்தல்களில் நிரப்பி இவ்வாறு விற்பனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அவசர பயணங்களை மேற்கொள்வதற்காக  கறுப்பு சந்தையில் எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டிய துா்ப்பாக்கிய  நிலை இந்நாட்டு மக்களுக்கு  ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் பாவனையாளர்கள்  தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments