Ticker

6/recent/ticker-posts

நாவலடியில் கைக்குண்டுத் தாக்குதல் - கபே

சற்று நேரத்திற்கு முன் யழ்ப்பாணம் பருத்துத்துறை பிரதேசத்தில் நாவலடிச்சந்தியில் கைக்குண்டு தாக்குதல் ஒன்று நிகழ்ந்துள்ளதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.  வாக்கொடுப்பு நிலையத்திற்கு 800மீட்ர் தொலைவிலேய இச்சம்பவம நிகழந்துள்ளது. வாக்களிக்கச் செல்லும் மக்களை அச்சுறுத்தும் நோக்கிலேய இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தால் பீதியடைந்த மக்கள் திரும்பி ஓட்டமெடுத்துள்ளனர் . ஆனாலும் பின்னர் வாக்கு அளிப்பதற்கு மக்கள் வாக்குச் சாவடியை நோக்கி வருகை தந்தனர்.

 ஹப்புத்தளை பிரதேசத்தில் ஹல்ததும்முல்ல பிரதேசத்தில் ஐ.ம.சு.கூ ஆதரவாளர்களுக்கு ஐ.தே.க. ஆதரவாரளர்கள் மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பிலு் எமக்கு புகார்கிடைத்துள்ளது. 

மேலும் மட்டக்களப்பு பிரதேசத்தில் பிள்ளையான் ஆதரவாளர்களால் முருகன்டி கோயில் அண்மையில் வாக்காளர்கள்அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் எமக்கு புகார் கிடைத்துள்ளது. 

இதுதவிர வேறு எந்த பாரததூரமான புகார்களும் எமக்கு கிடைக்கவில்லை. இன்று அதிகாலை கப்பளை மற்றும் நாவலபிட்டி பிரதேசங்களில்   வாக்காளர்கள் அச்சுறுத்தப்படுதல் தொடர்பான முறையீடுகள்  எமக்கு கிடைத்திருந்தது. ஆனாலும் பொலிஸாரின் தலையீட்டினால் சுமுகமான நிலைமைக்கு திரும்பியது.

இனிவரும் மணித்தியாலங்களில் அனைத்து தேர்தல் நடவடிக்கைகளும் சுமுகமாக நடைபெறும் என எதிர்பார்க்கிறோம். இம்முறை தேர்தலில் அதிகமான மக்கள் தமது வாக்குகளை அளிக்க முன்வந்துள்ளதை எமக்கு காணக்கூடியதாக இருந்தது எனவும் அவர் தெரிவித்தார்.



Post a Comment

0 Comments