எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் சிலவற்றை முடக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாதகமான நிலைமைகளை எதிர்நோக்கியிருக்கும் ஆளுந்தரப்பு, பொது எதிரணியின் வெற்றி
வாய்ப்பை தடுக்கும் பொருட்டு இந்த சமூக வலைத்தளங்களை முடக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய தேர்தல் வெற்றிக்கு பேஸ்புக்கும், இணையத் தளங்களும் பெரும் பங்காற்றியது இவ்வாறு ஒரு நிலைமை இலங்கையிலும் ஏற்பட்டு, அதன் மூலம் பொது வேட்பாளர் மைத்திரிபால வெற்றி வாய்ப்பை பெற்று விடக் கூடும் என்ற காரணத்தால் ஆளும் தரப்பு இவ்வாறான திட்டத்தில் குதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 Comments