அந்த வீட்டின் உரிமையாளர் கூறுகையில், மணமகளை வரவேற்க வீட்டிற்கு வெளியே விருந்தினர்கள் கூடியிருந்த வேளை குண்டு வெடித்ததாகவும் அந்த சம்பவத்தில் தனது சொந்த பிள்ளைகள் ஒன்பது பேர் காணா மல் போயுள்ளதாகவும் தெரிவித்தார். புதன்கிழமை ஆப்கான் படையினருக்கும் தலிபான் போராளிகளுக்குமிடையே நடைபெற்ற உக்கிர மோதலின் போது இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் வியாழக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
அன்றைய தினமானது ஆப்கானிஸ்தானிலான அமெரிக்க மற்றும் நேட்டோ படையினரின் படை நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
2001 ஆம் ஆண்டிற்கு பின் ஆப்கான் அதிகளவு உயிரிழப்புக்களை சந்தித்த ஆண்டாக கடந்த ஆண்டு உள்ளது.
அந்த ஆண்டில் அங்கு தலிபான்களுக்கு எதிரான போராட்டத்தில் குறைந்தது 4600 ஆப்கான் பாதுகாப்பு படையினர் உயிரிழந் துள்ளனர். ஆப்கானிலான நேட்டோவின் படை நட வடிக்கை ஆரம்பமானது முதற்கொண்டு இதுவரை சுமார் 3500 வெளிநாட்டுப் படை யினர் பலியாகியுள்ளனர்.

0 Comments