ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக பொது பல சேனாவினால் (BBS)தொடுக்கப்பட்ட மத நிந்தனை வழக்கு கடந்த 29.01.2015 – வியாழக்கிழமை கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி பிலபிட்டிய முன்னிலையில் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் தலைமையில் சிரேஷ்ட சட்டத்தரணி மைத்திரி குணரத்ன அடங்கிய குழுவினர் ஆஜரானார்கள்.
நடைபெற்ற விசாரனையில் மாதந் தோறும் ஜமாத்தின் செயலாளர் நீதிமன்ற அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டதுடன்,ஜமாத்தின் செயலாளருக்கு வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை மீண்டும் அடுத்த தவணை வரை நீக்கப்பட்டது.
வழக்கு மீண்டும் எதிர்வரும் 19.03.2015 க்கு ஒத்தி வைக்கப்பட்டது.

0 Comments