Ticker

6/recent/ticker-posts

அசிங்கப்பட்டார் மேர்வின்! (VIDEO)

நேற்று (09)  கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற புதிய ஜனாதிபதி மைத்ரீபால சிரிசேன அவர்களின் பதவியேற்பு வைபவத்தில் அழையா விருந்தினராக கலந்துகொள்ள அமைச்சர் மேர்வின் சில்வா வருகை தந்ததையடுத்து அங்கு குழுமியிருந்த இளைஞர்கள் அவரை நோக்கி 'ஹூ' ஒலி எழுப்பினர்.

இதனால் அசெளகரியமடைந்திருந்த மேர்வின் சில்வாவை வரவேற்க யாரும் முன்வராததால் தனியாக நின்றபடியே இருந்தார். பின்னர் தொடர்ந்தும்  இடைவிடாமல் இளைஞர்கள் 'ஹூ' ஒலியெழுப்பிதால் மேர்வின் சில்வா சுதந்திர சதுக்க வளாகத்தை விட்டும் வெளியேறினார்.    

அத்தோடு நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி செயலகத்தை விட்டு வெளியேறிய வேளை அவரை சந்தித்த பின்னர் வெளியே வந்த மேர்வின் சில்வாவிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினாத்தொடுத்த போது அவரது வழக்கமான பாணியிலேயே கோமாளித்தனமாக  பதிலளித்திருந்தார்.


Post a Comment

0 Comments