Ticker

6/recent/ticker-posts

நாமல் ராஜபக்ச விருப்பமில்லாமல்தான் வாக்களித்தாராம்

பொது சேவை ஊழியர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் எரிபொருள் விலைக்குறைப்பு போன்றன நீண்ட காலத்திற்குத் தாக்குப்பிடிக்க முடியாதவை என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச தான் விருப்பமில்லாமலேயே வரவு – செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் வரவு – செலவுத் திட்டத்தை ஆதரிப்பதற்கான முடிவோடு இன்று 164 மேலதிக வாக்குகளால் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் நாமல் ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிபொருள்களின் விலை குறைந்துள்ள நிலையில் தற்போது நமது நாட்டிலும் விலை குறைந்துள்ள போதும் இது எத்தனை நாளைக்குத் தாக்குப்பிடிக்கும் என்பதை சொல்ல இயலாது என தெரிவித்துள்ள அவர், அதே போன்று தனது தந்தையாரால் அறிமுகப்படுத்தப்பட்ட சம்பள உயர்வை சமாளிக்கக்கூடிய அளவை விட அதிகமாக தற்போதைய அரசு அறிவித்திருக்கும் நிலையில் அவற்றை எவ்வாறு நீண்ட நாட்களுக்குக் கையாள்வது என்பது சந்தேகத்துக்குரியது என தெரிவித்துள்ள அவர் தான் விருப்பமில்லாமலேயே வாக்களித்ததாக தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்புக்கு எதிராக ஒரேயொரு வாக்கே பதிவாகியிருந்தமையும் அது முன்னாள் ஜே.வி.பி. உறுப்பினர் அஜித் பெரேராவுடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments