பாகிஸ்தான் நாட்டில் வசிக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகளை அந்நாட்டிற்கே திருப்பி அனுப்ப பாகிஸ்தான் அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் நடந்த உள்நாட்டு போர் காரணமாக, 16 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாகிஸ்தானில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
தற்போது ஆப்கனிஸ்தானில் ஜனநாயக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஆஃப்கான் அகதிகளை சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்புவது தொடர்பாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐ.நா. அமைப்பின் அகதிகள் பிரிவுக்கு இடையே முத்தரப்பு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஆப்கானிஸ்தான் அகதிகளை சொந்த நாட்டிற்கே திருப்பியனுப்ப பாகிஸ்தான் அரசு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
பாகிஸ்தானில், ஆஃப்கான் அகதிகள் தங்கியுள்ள இடங்களை தீவிரவாதிகள் தங்களது மறைவிடமாக பயன்படுத்துவது அதிகரித்து வருவதாக
பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அகதிகளால் பெரும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால், அவர்களை விரைவில் தாயகத்திற்கு திருப்பி அனுப்ப முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். -

0 Comments