மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சரவைப் பேச்சாளராக இறுமாப்புடன் இருந்த கெஹலிய ரம்புக்வெல, மீண்டும் ஐதேகவில் இணைந்து கொள்ள முயன்ற போதிலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவரை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளார்.
மகிந்த அரசாங்கத்தில் அமைச்சரவைப் பேச்சாளராக இருந்த கெஹலிய ரம்புக்வெல, எதிா்க்கட்சிக்கு சேறுபூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டு எந்த நேரமும் ஊடகங்களில் பரபரப்பான மனிதராகவே இருந்து வந்தார்.
ஆனால், மஹிந்த ராஜபக்சவின் வீழ்ச்சிக்குப் பின்னர், கெஹலிய ரம்புக்வெல தேடுவாரின்றி இருக்கிறார்.
இந்தநிலையில், கடந்தமாதம் 24ம் நாள், பிரதமர் செயலகத்தில் இருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், தொலைபேசியில் பேசிய அவர், மீண்டும் தான் ஐதேகவில் இணைந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.
ஆனால், அவரை ஏற்றுக் கொள்ள விரும்பாத ரணில் விக்கிரமசிங்க, கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர், ரம்புக்வெல திரும்பி வருவதை விரும்பவில்லை என்று நேரடியாகவே அவரிடம் கூறியுள்ளார்.
இதனால் ஐதேக அரசாங்கத்துடன் ஒட்டிக் கொள்ளும் ரம்புக்வெலவின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

0 Comments