கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வாடகை வாகனங்களின் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
வாடகை வாகனத்திற்கான கட்டணத்தை 10 வீதத்தால் குறைத்துள்ளதாக விமான நிலைய ஐக்கிய வாடகை வாகன சங்கத்தின் தலைவர் காமினி கெவிடியாகல தெரிவித்தார்.
எரிபொருள் விலை குறைப்பிற்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
06 நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 450 வாகனங்கள் விமான நிலைய வாடகைக்கு போக்குவரத்தில் ஈடுபடுவதாக காமினி கெவிடியாகல கூறினார்.
அரசாங்கம் வழங்கியுள்ள நிவாரணங்களின் ஊடாக பயணிகளுக்கு நன்மை கிடைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய ஐக்கிய வாடகை வாகன சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

0 Comments