Ticker

6/recent/ticker-posts

முஸ்லிம்களின் உடலில் ஓடுவது சிங்கள இரத்தமாம் - பைஸர் முஸ்தபா கூறுகிறார்

முஸ்லிம்களின் உடலில் ஓடுவது சிங்கள இரத்தம் என பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் ‘ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவின் வெற்றியானது சகல இனங்களின் கூட்டிணைவால் கிடைத்த வெற்றி. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளினால் மைத்திரிபால வெற்றி பெற்றார் எனக் காண்பிப்பதற்கு சிலர் முற்படுகின்றனர்.

மைத்திரிபால கம்பஹா மாவட்டத்தில் சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளை பெற்றிருக்காது போயிருந்தால் வட கிழக்கு வாக்குகளில் வெற்றிபெற்றிருக்க முடிந்திருக்காது. சகல மக்களும் மைத்திரியின் வெற்றிக்காக ஒன்றிணைந்திருந்தனர். ஆட்டோ சாரதிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், சிவில் சமூகத்தினர் என பலரும் ஒன்றிணைந்திருந்தனர்.

இவர்களின் கூட்டு முயற்சியினால் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தது. உண்மையில் முஸ்லிம் இனம் என்பது அராபிய வியாபாரிகள் இலங்கை வருகை தந்த போது தமது மனைவிகளின்றி வந்தனர். இந்த நிலையில் அவ்வியாபாரிகள் இலங்கைப் பெண்களை மணம் முடித்துக் கொண்டனர்.

இது தான் யதார்த்தம். அந்த வகையில் எமது உடலில் ஓடுவது சிங்கள இரத்தம். முஸ்லிம் சமூகத்தையும் சிங்கள சமூகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. எம்மை சவூதி அராபியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் படி சிலர் சொல்லிவருகின்றனர். நாம் அதனை கருத்தில் எடுக்கவில்லை. நாம் இலங்கையர். நான் கண்டியில் பிறந்த முஸ்லிம் என்றாலும் எனது பெயரில் சிங்கள பெயர் உள்ளது’ எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments