Ticker

6/recent/ticker-posts

மத ரீதியிலான மோதல்களை உருவாக்குபவர்களுக்கு இந்தியாவில் இடம் இல்லையாம்: மோடி கூறுகிறாா்.

மத துவேசத்தை தூண்டிவிடும் செயலை தமது அரசு ஒருபோதும் அனுமதிக்காது என பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். 
டெல்லி விக்யான் பவனில் நடந்த கிறிஸ்துவ மத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார். 

தங்களுக்கு விருப்பமான மத நம்பிக்கையை பின்பற்ற ஒவ்வோருவருக்கும் பூரண உரிமை உள்ளது என கூறிய பிரதமர் இதற்கான சுதந்திரத்தை தமது அரசு உறுதி செய்யும் என்றார். 

அனைத்து மதத்தினரையும் மதித்து நடக்கும் பண்பாடு ஒவ்வொரு இந்தியனின் உதிரத்திலும் உணர்விலும் கலந்தது என குறிப்பிட்ட மோடி மதசகிப்பு தன்மையுடனும் பரஸ்பர மரியாதை உடனும் பிற மதத்தினரை மதிக்க வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொண்டார்.  மத ரீதியிலான மோதல்களை உருவாக்குபவர்களுக்கு இந்தியாவில் இடம் இல்லை என்றும் அவா் கூறியுள்ளாா்.

Post a Comment

0 Comments