போலிக் கடவுச் சீட்டு பெற்றுக் கொள்வதற்காக போலி ஆவணங்களை சமா்ப்பித்த குற்றச் சாட்டில் கைது செய்யப் பட்டிருக்கும் சஷி வீரவன்சவினால் ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட தகவல்கள் அடங்கிய கோப்புகள் (பைல்கள்) காணாமல் போயிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளா் அஜித் ரோஹண தொிவித்துள்ளாா்.
சஷி வீரவன்சவின் போலி கடவுச் சீட்டு தொடா்பான செய்திகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னா் ஊடகங்களில் வெளியானது. அப்போதே நடவடிக்கை எடுக்காத பொலிஸாா் காலம் கடந்து விசாரணையை ஆரம்பித்து விட்டு இப்போது பைல்கள் காணாமல் போயிருப்பதாக சொல்வது மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

0 Comments