Ticker

6/recent/ticker-posts

சல்மான்கான் ஒரு இந்து முஸ்லிம்?

பொலிவுட் நடிகர் சல்மான் கான், மான்களை சுட்டுக் கொன்ற வழக்கில் இன்று நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த 1998 ஆம் ஆண்டு ‘ஹம் சாத் சாத் ஹெய்ன்’ என்ற திரைப்பட படப்பிடிப்பிற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் நகருக்கு நடிகர் சல்மான் கான் சென்றிருந்தார்.
அப்போது ஜோத்பூர் அருகே உள்ள கன்கனி என்ற கிராமத்தில், வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் விலங்கினமான மான்கள் இரண்டை சுட்டுக்கொன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 16 ஆண்டுகளாக ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் சல்மான்கான் இன்று நேரில் ஆஜராகினார்.
அப்போது தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், இவ்வழக்கு பொய்யாக ஜோடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் சல்மான் கானின் முழுப்பெயர், பெற்றோரின் பெயர், தொழில், மதம் உள்ளிட்ட விபரங்களை தெரிவிக்குமாறு கேட்ட தலைமை மாஜிஸ்திரேட் அனுபாமா பிஜ்லானியிடம்,  எனது கட்சிக்காரர் இந்தியர் என்று சல்மான் கானின் வக்கீல் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் சில கேள்விகளை மாஜிஸ்திரேட் கேட்டபோது ‘நான் இந்து- முஸ்லிம்’ என்றும், பிரபல சினிமா கதாசிரியரான எனது தந்தை சலீம் கான் ஒரு முஸ்லீம், எனது தாயார் சுஷீலா சரக் ஒரு இந்து எனவும் சல்மான் கான் விளக்கம் அளித்துள்ளார்.

Post a Comment

0 Comments