Ticker

6/recent/ticker-posts

வேலை நிறுத்தத்திற்கு ஆயத்தமாகும் அரச வைத்தியர்கள்!

தமது கோரிக்கைக்கு ஏற்ப சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் நாளைய தினத்திற்கு பிறகு வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 
தமது கோரிக்கை குறித்து நாளைய தினம் நிதி அமைச்சின் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக சங்கத்தின் உதவி செயலாளர் நலீன் டி ஹேரத் தெரிவித்துள்ளார். 

பேச்சுவார்த்தை வெற்றியளிக்காவிடின் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்யவுள்ளதாக அவர் கூறினார். 

எனினும் வைத்தியர்கள் சங்கத்தின் இக்கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக இடைக்கால வைத்திய சேவை ஒன்றிணைந்த சபை தெரிவித்துள்ளது. 

வைத்தியர்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்த்தால் 17 சுகாதார சேவை சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் என சபையின் ஊடகப் பேச்சாளர்  சுமணசேன தெரிவித்தார்.

Post a Comment

0 Comments