Ticker

6/recent/ticker-posts

IPL ஏலத்தில் மெத்தியூஸ் 5 கோடி ரூபாவிற்கு விலை பேசப்பட்டுள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் முடிவடைந்தவுடன் ஆரம்பமாகவுள்ள இந்தியன் பீரிமியர் லீக் (IPL) கிரிக்கெட் போட்டித் தொடருக்கான வீரர்கள் தெரிவு தற்போத நடைபெற்று வருகிறது.இதற்கமைய நேற்று (16) நடைபெற்ற ஏலத்தில் இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் இந்திய ரூபாவில் 7.5 கோடிக்கு அதாவது
இலங்கை ரூபாவில் 15 கோடி ரூபாவிற்கு விலை பேசப்பட்டுள்ளார்.
டெல்லி டெயார் டெவில்ஸ் அணிக்காகவே இலங்கை வீரர் மெத்தியூஸ் வாங்கப்படுகிறார்.
நேற்றைய தினம் மெத்தியூசின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட போது இந்திய ரூபாவில் ஒன்றரை கோடிக்கு ஆரம்பித்த ஏலம் 7.5 கோடி வரை சென்றது. இறுதியாக இலங்கை வீரர் மெத்தியூசை தமது அணியில் இணைத்துக் கொள்ள பெங்களுர் ரோயல் சேலஞ்சஸ் அணியும், டெல்லி டெயார் டெவஸ் அணியும் இறுதி வரை போட்டியிட்டன. எனினும், இறுதியாக டெல்லி அணி அஞ்சலோவ் மெத்தியூசை வாங்கியது.
இந்த ஏலத்தில் இலங்கை அணியின் மஹெல ஜயவர்தன, ரி.எம். டில்ஷான், குமார் சங்கக்கார ஆகிய வீரர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும், இந்த வீரர்களை வாங்குவதற்கு எந்தவொரு அணியும் முயற்சிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments