Ticker

6/recent/ticker-posts

மக்கள் பணத்தை கொள்ளையிட்டிருக்காவிட்டால் ஒரு குடும்பத்திற்கு 10லட்சம் வழங்கியிருக்கலாம்!- சஜித்

கடந்த அரசாங்கம் பாரியளவில் மக்கள் பணத்தை கொள்ளையிட்டிருக்கா விட்டால் ஒரு குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபா வழங்கியிருக்கலாம் என வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமஹாராம தெபரவௌ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அண்மையில் பங்கேற்றிருந்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேன ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொள்வதற்கு முன்னதாக காணிகள், மக்களின் பணம் கொள்ளையிடப்பட்ட ஓர் காலமே காணப்பட்டது.
நாட்டின் சொத்துக்கள் மக்களின் சொத்துக்களை ஒரு சிலர் தங்களது சொந்த உடமைகளாக பயன்படுத்திக் கொண்ட காலமது.
இந்த காலத்தை தோற்கடித்தே மைத்திரிபாலவின் புதிய அரசாங்கம் ஆட்சிப்
பொறுப்பினை ஏற்றுக்கொண்டது.
காணிகள் இல்லாத எமது மக்களுக்கு இனääமதää கட்சிää வகுப்பு பேதமின்றி காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த காலங்களில் மோட்டார் பந்தயங்களை வைக்க அரச காணிகள் கையகப்படுத்தப்பட்டன.
அமைச்சர்களின் சொந்த சொத்துக்களை விஸ்தரித்துக் கொள்ள மக்களின் காணிகள் சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இலங்கையில் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் சொந்த வீடுகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.
சமுர்த்தி கொடுப்பனவு 200 வீதத்தினால் அடுத்த மாதம் முதல் அதிகரிக்கப்படவுள்ளது.
சகோதரத்துவம், நல்லிணக்கம், சமாதானத்தை ஏற்படுத்துவதே எமது பிரதான நோக்கம் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments