Ticker

6/recent/ticker-posts

சரத் பொன்சேகா இலங்கை வரலாற்றில் முதலாவது பீல்ட் மார்ஷலாகிறார்?

முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்வரும் 22ம் திகதியன்று இராணுவ தலைமையத்தில் நடைபெறவுள்ள நிகழ்வின் போது பீல்ட் மார்ஷல் என்று பெயரிடப்படவுள்ளார்.
இது தொடர்பான தகவல் உயர்மட்ட தரப்பில் இருந்து வெளியாகியுள்ள போதும் உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.
பீல்ட் மார்ஷல் என்ற பதவி இலங்கையின் இராணுவத்துறையில் வழங்கப்படும் அதி சிரேஸ்ட பதவியாகும்.
இதில் சாதாரண தரம் முதல் ஜெனரல் தர அதிகாரி வரையிலான பதவிகளும் அடங்கும்.
இயல்பாக போர் இடம்பெற்ற காலப்பகுதியில் அசாதாரண சாதனைகளை மேற்கொண்டவர்களுக்கே பீல்ஸ் மார்ஸல் பதவி வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் இலங்கையின் வரலாற்றில், இதுவரை எவருக்கும் பீல்ட் மார்ஷல் தரம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments