தனது ஒவ்வொரு கண்டுபிடிப்பின் மூலமாகவும் தொழில்நுட்ப உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்தும் ’ஸ்ப்ரிங் பார்வேர்ட்’ விழா அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள யெர்பா புவேனா செண்டரில் இன்று நடைபெற்றது. இதில் பலரின் எதிர்பார்ப்பாக இருந்த ஐபோன் 6 எஸ் அறிமுகம் செய்யப்படவில்லை. எனினும் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் வாட்சின் வசதிகளைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யத்தின் எல்லைக்கே சென்றனர்.
முன்னதாக, விழாவைத் தொடங்கி வைத்து மேடையேறிய ஆப்பிள்
நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக், இதுவரை உலகமெங்கும் 70 கோடி ஐபோன்கள் விற்கப்பட்டுள்ள மகிழ்சியான தகவலையும், ஆப்பிள் டிவியின் விலை 69 டாலராக குறைக்கப்பட்டுள்ள தகவலையும் தெரிவித்தார். ’ரிசர்ச் கிட்’ எனப்படும் மருத்துவ ஆராய்ச்சிக்கு பக்கபலமாக இருக்கும் அப்ளிகேஷனையும், 12” ரெட்டினா திரை கொண்ட மேக் புக்கையும் அறிமுகப்படுத்தினார்.
”நீங்கள் உடலில் அணிந்திருக்கும் எதுவும், நீங்கள் யார்? என்பதை இந்த உலகிற்கு வெளிப்படுத்தும். உங்கள் மதிப்பை உயர்த்தும் வகையில் ஆப்பிள் வாட்சின் அனைத்து மாடல்களையும் தயாரித்திருக்கிறோம்” என்று கூறி ஆப்பிள் வாட்சின் மாடல்களை மேடையில் இருந்த பிரம்மாண்ட திரையில் அறிமுகப்படுத்திய குக், ”உலகில் இதுவரை தயாரிக்கப்பட்ட வாட்சுகளில் இதுதான் அதி நவீனமானது” என்றார். பின்னர் அதன் சிறப்பு வசதிகளைப் பற்றிப் பேசிய அவர், ஆப்பிள் வாட்ச் மூலம் இ-மெயில் அனுப்புவது, கால் செய்வது மற்றும் ‘ஆக்டிவிட்டி ஆப்’ எனும் நம்முடைய செயல்களைக் கண்காணித்து அதைப் பற்றி குறிப்புகளைச் சொல்லும் வசதியை விளக்கினார்.
ஆப்பிள் தனது புதிய வாட்சை கிறிஸ்டி டர்லிங்டன் என்பவரிடம் கொடுத்திருப்பதாக குக் சொன்னதும், கிறிஸ்டி அந்த வாட்சைப் பயன்படுத்திய வீடியோ திரையில் ஒளிர்ந்தது. ”உலகின் முக்கியமான மாரத்தான் போட்டிகளில் ஒன்றான ஆப்பிரிக்க மாரத்தானில் இதைப் பயன்படுத்தியுள்ள கிறிஸ்டியின் அனுபவத்தைக் கேட்போம்” என்று கூறிய குக் அவரை மேடைக்கு அழைத்தார். மேடையேறிய கிறிஸ்டி வாட்சை மாரத்தான் பயிற்சிக்காக பயன்படுத்தியதாகவும், இது மிகவும் கச்சிதமானதென்றும் தெரிவித்தார்.
வாட்சில் போட்டோஷாப் உபயோகிப்பதை செய்து காட்டிய போது ரசிகர்கள் ஆச்சர்யமடைந்தனர். அதைவிட தனது மகன் கார் கேரேஜின் சாவியை மறந்து விட்டதாக அப்பவுக்கு செய்தி அனுப்பியதும் அதைப்பார்த்த அப்பா உனக்காக நான் திறக்கிறேன் என்று சொல்லிவிட்டு எங்கோ இங்கிருந்தபடியே தனது பதிவு செய்த குரலை ஆப்பிள் வாட்ச் மூலம் அனுப்பி வீட்டின் கேரேஜை திறந்ததும் அனைவரும் அசந்தனர்.
பின்னர் மேடையேறிய கெவின் லிஞ்ச், ஆப்பிள் வாட்சில் இன்ஸ்டாகிராம், ட்விட்டர், அமெரிக்கன் ஏர்லைன்ஸ், போன்ற அப்பிளிகேஷன்களையும் ’வீ சேட்’ டில் வரும் செய்திகளுக்கு பதில் அனுப்புவது, ’ஆப்பிள் பே’ வசதி மூலம் கிரெடிட் கார்டை உபயோகிப்பது போன்றவற்றை விளக்கினார். மேக்னடிக் சார்ஜரைக் கொண்டு சார்ஜ் செய்யப்படும் ஆப்பிள் வாட்சில் பேட்டரி 18 மணி நேரம் வரை நீடித்து நிலைத்திருக்கும்.
பின்னர் கிரே, மற்றும் சில்வர் கலர் கொண்ட அலுமினியம் பினிஷிங் செய்யப்பட்ட ஆப்பிளின் ஸ்போர்ட் வாட்ச் அறிமுகப்படுத்தப்பட்டது. 38, மற்றும் 42 எம்எம் அளவுள்ள வாட்சுகள் முறையே 349, மற்றும் 399 டாலர் விலை கொண்டது.
அடுத்து ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல் பினிஷிங் செய்யப்பட்ட ஸ்டீல் வாட்ச் அறிமுகப்படுத்தப்பட்டது. 38 எம்எம் 549-1049 டாலர் வரையிலும், 42 எம்எம் 599-1099 டாலர் வரையிலும் விலை கொண்டது.
இறுதியாக அதி நவீன ஆப்பிள் எடிசன் வாட்சின் விலை 10000 டாலரிலிருந்து தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. (18 கேரட் கோல்டினால் உருவாக்கப்பட்டதால் இந்த விலை) மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான வாட்சுகளே தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 10-ம் தேதி முதல் இதற்கான முன்பதிவு தொடங்குகிறது. ஏப்ரல் 24-ம் தேதி முதல் ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் இந்த வாட்ச் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
விழா இறுதிக்கட்டத்தை எட்டியதும் அரங்கில் அம்ர்ந்திருந்த ஆப்பிள் ஊழியர்கள் அனைவரையும் எழுந்து நிற்கச் சொல்லி அவர்களை அரங்கில் இருந்த ரசிகர்களுடன் சேர்ந்து கைதட்டி கவுரவப்படுத்திய குக், விழாவிற்கு வந்த அனைவருக்கும் நன்றி கூறி விழாவை இனிதே நிறைவு செய்தார்.

0 Comments