Ticker

6/recent/ticker-posts

ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தானிடம் உதவியை நாடும் சவுதி அரேபியா

ஈராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர். இந்த தீவிரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்கா தலைமையில் பல்வேறு நாடுகள் ஓரணியில் திரண்டு வருகின்றன. அமெரிக்காவின் இந்த கூட்டுப்படையில் சவுதி அரேபியா மற்றும் பல்வேறு வளைகுடா நாடுகளும் இணைந்துள்ளன.

ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து தங்கள் நாட்டு எல்லைகளை காக்கவும், அவர்களுக்கு எதிராக போராடவும்,
தங்கள் நெருங்கிய நட்பு நாடுகளான துருக்கி, எகிப்து மற்றும் பாகிஸ்தானின் உதவியை நாட சவுதியின் புதிய மன்னரான சல்மான் முடிவு செய்துள்ளார்.குறிப்பாக ஐ.எஸ். தீவிரவாதிகளை எதிர்த்து போரிட பாகிஸ்தான் அரசு, தங்கள் ராணுவத்தை சவுதி அரேபியாவுக்கு அனுப்ப வேண்டும் என மன்னர் சல்மான் விரும்புகிறார். 

இதற்கு கைமாறாக பாகிஸ்தானுக்கு பல்வேறு பொருளாதார உதவியை வழங்கவும் சவுதி அரேபியா திட்டமிட்டு உள்ளது. குறிப்பாக நீண்டகால கடன் அடிப்படையில் எண்ணெய் வினியோகம் உள்ளிட்ட உதவிகளை அறிவித்து உள்ளது.

Post a Comment

0 Comments