சிறுவனை கடத்திக் கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்ற ஷப்கத் ஹுசைனை தூக்கிலிடுவதை பாகிஸ்தான் அரசு 72 மணி நேரத்திற்கு ஒத்திவைத்தது.
பாகிஸ்தானில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் பெஷாவரில் உள்ள ராணுவப் பள்ளியில் தலிபான் தீவிரவாதிகள் புகுந்து, குழந்தைகள் மீது மிருகவெறித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 140க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட 150 பேர் பலியாகினர். இச்சம்பவத்தை அடுத்து பாகிஸ்தான் அரசு, 6 வருடங்களாக நீடித்துவந்த, மரண தண்டனை நிறைவேற்றத்திற்கான தடையை நீக்கி உத்தரவிட்டது. தீவிரவாத சம்பவங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தண்டனை நிறைவேற்றப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்தது. இதனையடுத்து தீவிரவாதிகள் தூக்கிலிடப்பட்டு வருகின்றனர்.
பாகிஸ்தான் நாட்டில் சுமார் 8 ஆயிரம் மரண தண்டனை கைதிகள் சிறையில் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக பாகிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறைகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கான, தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்தவகையில், சிறுவனை கடத்திக் கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்ற ஷப்கத் ஹுசைனை தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. தற்போது ஹுசனை தூக்கிலிடுவது தொடர்பான முடிவு 72 மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. வியாழன் கிழமை தூக்கிலிடப்பட இருந்தநிலையில், முடிவு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாண அரசும், ஷப்கத் ஹுசைனை தூக்கிலிடுவது மூன்று நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என்று உறுதி செய்து உள்ளது.
ஷப்கத் ஹுசைன் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட போது அவருடைய வயது என்ன? என்றும், குற்றவாளியென ஒத்துக்கொள்ள துன்புறுத்தப்பட்டாரா? என்றும் விசாரிக்கப்பட உள்ளது மனித உரிமைகள் ஆணைய தகவல்கள் தெரிவித்து உள்ளன. ஷப்கத் ஹுசைனை தூக்கிலிடுவதை 72 மணி நேரங்கள் ஒத்திவைக்க பாகிஸ்தான் அதிபர் உத்தரவிட்டுள்ளார் என்று மீடியா செய்திகள் வெளியாகி உள்ளது. ஷப்கத் ஹுசைனுக்கு உண்மையான நீதி வழங்கப்படவில்லை என்றும், அவருக்கு உண்மையான ஐ.டி. இல்லாத காரணத்தினால் வயது தவறாக மதிப்பிடப்பட்டு உள்ளது என்றும் குற்றச்சாட்டு எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments