ஜம்மு-காஷ்மீர் முதல்வர் முப்தி சயீத், அண்மையில் காஷ்மீாில் இடம் பெற்ற தோ்தல் ஒழுங்காக நடைபெறுவதற்கு பாகிஸ்தானும், காஷ்மீா் போராளிக் குழுக்களுமே காரணம் என கருத்து தெரிவித்திருந்தாா். இந்திய அரசியலில் முப்தியின் இந்தக் கருத்து பெரும் சா்ச்சையை கிளப்பியுள்ளது.
காஷ்மீா் முதல்வா் முப்தியின் இந்தக் கருத்துகள் ஏற்க இயலாதவை என்று இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மக்களவையில் திங்கள்கிழமை அவர் பேசியதாவது:
சயீதின் கருத்தில், மத்திய அரசுக்கும், பாஜகவுக்கும் உடன்பாடு கிடையாது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமருடன் பேசினேன். அவரது ஒப்புதலுடன், அரசின் நிலைப்பாடு குறித்து விளக்கம் அளிக்கிறேன்.
தனது கருத்து குறித்து, பிரதமருடன் சயீது பேசவில்லை. காஷ்மீரில் தேர்தல் சுமுகமாக நடந்ததற்கு, மாநில மக்களும், தேர்தல் ஆணையமும், ராணுவம், பாதுகாப்புப் படைகளுமே காரணம். தேர்தலில் அதிக அளவு வாக்குப்பதிவு நடந்ததற்கான பெருமை, மக்களையே சேரும் என்றார்.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அளித்த விளக்கம்:
ஜம்மு-காஷ்மீரில், கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலும், அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலும் சுமுகமாக நடைபெற்றதற்கு, மாநில மக்களும், தேர்தல் ஆணையமும், பாதுகாப்புப் படைகளுமே காரணம். அவர்களுக்கே இந்தப் பெருமை சேரும் என்றார்.

0 Comments