இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு 5 கிலோ தங்கம் கடத்திச் சென்றவர் குறித்து சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து இன்று (03) அதிகாலை 2.30 அளவில் சென்னைக்கு விமானம் ஒன்று சென்றுள்ளது.
விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு துப்புரவு பணியாளர்கள் விமானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பயணிகள் இருக்கையின் கீழ் 5 கிலோ எடைக் கொண்ட தங்க பிஸ்கட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டு, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
தங்க பிஸ்கட்டுகள் இருந்த இருக்கையில் அமர்ந்து வந்த பயணி குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் டெல்லிக்கு செல்லவிருந்த விமானம் தற்போது சென்னை விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Comments