மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவிற்கு எதிராக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாந்த ஜயத்திலக்க என்ற நபரால் இந்த முறைப்பாடு இன்று (04) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எவன்காட் நிறுவன தலைவரின் கடவுச்சீட்டை நீதிமன்றம் விடுவித்தது நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் திலக் மாரப்பன ஆகியோரின் தலையீட்டின் மத்தியில் என அநுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளதாக சாந்த ஜயத்திலக்க தெரிவித்துள்ளார்.
அநுரகுமாரவின் இந்த கருத்தானது வரலாற்றில் நீதிமன்றுக்கு விடுக்கப்பட்ட பாரிய அவமதிப்பு என சாந்த ஜயத்திலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அது தொடர்பில் விசாரணை செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாடு செய்துள்ளதாக சாந்த ஜயத்திலக்க குறிப்பிட்டுள்ளார்.

0 Comments