போதைப்பொருள் வைத்திருந்த எட்டு பேரை பண்டாரவளை பொலிசார் இன்று கைது செய்யப்பட்டதுடன் சந்தேக நபர்களிடமிருந்து 750 மில்லி கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மேற்படி கைது செய்யப்பட்ட அனைவரும் 25 முதல் 35 வயது வரையிலானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் பதுளை, பண்டாரவளை மற்றும் வெலிமடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்கள் எனவும் போதைப்பொருள் விநியோகம் செய்பவருக்கு ஈஸி காஷ் அடிப்படையில் பணம் செலுத்தி போதைப்பொருள் பெற்றுக்கொள்ள இவர்கள் முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் பண்டாரவளை அட்டம்பிட்டிய என்னும் இடத்தில் போதைப்பொருட்களை மறைத்து வைத்து சந்தேக நபர் விற்பனை செய்துள்ளார். பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

0 Comments