நாட்டில் கிராமிய மட்டத்தில் மிக துரிதமாக விஸ்தரிக்கப்பட்டு வரும் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடும் தரப்பினருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி 3 தடவைகளுக்கு மேலாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட தரப்பினர்களுக்கு எதிராக அபராதங்களை விதிப்பதை விட கடூழிய சிறைத்தண்டனையை விதிக்க தீர்மானித்துள்ளதாக நீதி மற்றும் தொழிலுறவு அமைச்சு நேற்று அறிவித்தது.
இது தொடர்பாக நேற்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபகஷ தலைமையில் போதைப்பொருள் தடுப்பு ஒன்றிணைந்த செயலணி அமர்வுகளின் போது ஆராயப்பட்டுள்ளது.
கசிப்பு. கஞ்சா, கள்ளு போன்ற போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் விநியோக செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினாலும் அபராதம் செலுத்தி அவர்கள் விடுதலையாகும் நிலைமை உள்ளது.
பின்னர் அவர்கள் மீண்டும் அதே குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இந்தநிலைமைகளை தவிர்க்கும் வகையில் புதிய சட்டத்திட்டங்கள் வலுப்படுத்தப்படவுள்ளதாக அந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

0 Comments