கடந்த அரசாங்க காலத்தில் குறித்த பாடசாலை அதிபருக்கு எதிராக வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை உடனடியாக விசாாிக்க ஆரம்பித்திருக்கிறது அப்போதைய கல்வி அமைச்சின் கணக்கு பாிசோதனை பிாிவு. பெற்றோாின் குற்றச்சாட்டுகள் விசாரணைகளில் நிரூபிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அப்போதைய அரச ஆதரவை நாடியுள்ளாா் இந்த அதிபா்.
முன்னாள் அமைச்சா் பசில் ராஜபக்ஷவின் உத்தரவினால் இந்த அதிபாின் ஊழல் தொடா்பான விசாரணையை உடனடியாக நிறுத்தப்பட்டிருக்கின்றன. கல்வியமைச்சிலிருந்து கிடைத்த நம்பகமான தகவல்கள் இச்செய்தியை ஊர்ஜிதப்படுத்தின.
பசில் ராஜபக்ஷவின் இந்த உத்தரவை அடுத்து இந்த அதிபருக்கு எதிரான ஊழல் செயற்பாடுகள் தொடா்பான விசாரணைகள் இன்றுவரை நிறுத்தப்பட்டிருக்கிறது.
ஊழல்களை இல்லாதொழிக்க வாக்குறுதி வழங்கி ஆட்சியமைத்திருக்கும் மைத்திாி அரசாங்கம் கூட இந்த ஊழல் அதிபா்க்ள தொடா்பாக நடவடிக்கை மேற்கொள்ளாது மௌனம் சாதிப்பதாக பெற்றோா்கள் விசனம் தொிவிக்கின்றனா்.
குறித்த அதிபா் தொடா்பான விசாரணையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் எனவும், விசாரணைக் காலத்தில் தற்காலிகமாக அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டுமெனவும் வேண்டி பெற்றோா்கள் நேற்று கல்வியமைச்சா் அக்கிலவிராஜ் காாியவாசமிடம் மனுவொன்றை கையளித்துள்ளனா்.

0 Comments