அமைச்சுப் பதவிகளை பெறாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள், எதிர்க்கட்சியில் இருந்துகொண்டே அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவார்கள் என இடர் முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர் நேற்று அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் பௌசி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவர்கள் அரசாங்கத்தின் பிழைகளை அவ்வப்போது சுட்டிக்காட்டும் அதேவேளை, அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் சிறந்த திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தாம் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments