ஆப்கானிஸ்தானில் குர்ஆன் பிரதிகளை எரித்ததாக குற்றம்சாட்டப்பட்டு அடித்துக் கொலைசெய்யப்பட்ட பெண் உண்மையில் ஓர் அப்பாவி என்று அந்நாட்டின் குற்றவியல் வழக்குகளுக்கான மூத்த விசாரணையாளர் கூறுகின்றார்.
ஃபர்குன்தா என்ற அந்தப் பெண்ணின் இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டிருந்தனர். அவரது பிரேதப் பெட்டியை பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள் சுமந்துசென்றனர்.
ஆத்திரமடைந்த கும்பல் ஒன்று, கடந்த வியாழக்கிழமை காபூலில் உள்ள பள்ளிவாசல் ஒன்றிலிருந்து அந்தப் பெண்னை வெளியே இழுத்துவந்து அடித்து உதைத்து அவரது உடல் மீது தீயிட்டு கொழுத்தியுள்ளது.
ஆனால், கொலை செய்யப்பட்ட பெண் குர்ஆன் பிரதிகளை எரித்ததற்கான எந்தவொரு தடயமும் இல்லை என்று ஜெனரல் மொஹமட் ஸாஹிர் தெரிவித்துள்ளார்.
இந்த பெண் கொடுரமாக தாக்கப்படும் போது பொலிஸாா் அவரை காப்பாற்றுவதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லையென்று கூறப்படகின்றது.
முன்னதாக, இந்தக் கொலையை கண்டித்திருந்த ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கானி, அதுபற்றிய விசாரணைக்கும் உத்தரவிட்டிருந்தார்.


0 Comments