Ticker

6/recent/ticker-posts

கிழக்கு மாகாண முதலமைச்சரினால் எவ்வித பிரயோசனமும் இல்லை – மக்கள் எதிர்ப்பு

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தமக்கு இதுவரை எவ்வித உதவிகளையும் வழங்கவில்லை என ஓட்டமாவடி மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

மட்டகளப்பு – ஓட்டமாவடி பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றிலேயே கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களின் காணி பிரச்சினைகளை கேட்டறியும் கூட்டமொன்று, ஓட்டமாவடி பிரதேசத்தில் நேற்றிரவு நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.அஹமட் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி மக்கள் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


ஓட்டமாவடி மக்கள் எதிர்நோக்கும் காணி பிரச்சினைகள் குறித்து இந்த கலந்துரையாடலின் போது, மக்கள் பிரதிநிதிகளுக்கு தெளிவூட்டப்பட்டதாக அறிய வருகிறது.

இந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டிற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போது, ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் வெற்றிக்காக உழைக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியதாகவும், அவ்வாறே தாம் உதவிகளை வழங்கிய போதிலும், கிழக்கு மாகாண முதலமைச்சர் தமக்கு இதுவரை எவ்வித உதவிகளையும் வழங்கவில்லை எனவும் மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments