Ticker

6/recent/ticker-posts

கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

கொழும்பு பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் டபிள்யூ குமார ஹிரும்புரேகவை பதவி விலகுமாறு வலியுறுத்தி பல்கலைக் கழக விரிவுரையாளர் சங்கம் எதிர்ப்பார்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

நேற்று பகல் ஆரம்பமான இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் இடம்பெறுவதாக பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர் சங்கத்தின் தலைவர் தேவக வீரக்கோன் தெரிவித்தார்.
உபவேந்தரின் காரியாலயம் மற்றும் செயலகத்திற்கு முன்னாலேயே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது.

உபவேந்தர் பதவியில் இருந்து விலகும்வரை இந்த போராட்டம் தொடரும் என பல்கலைக் கழக விரிவுரையாளர் சங்கத்தின் தலைவர்  தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments