Ticker

6/recent/ticker-posts

விமல் வீரவங்சவிடம் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவிடம்  இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்று வாக்குமூலம் பதிவு செய்துவருகின்றது
சொத்துக்கள் மற்றும்  ஊழல்கள் குறித்து கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் முன்னாள் அமைச்சரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி விக்கிரமசிங்க தெரிவித்தார்.


வாக்குமூலமளிப்பதற்காக சமூகமளிக்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச இன்று முற்பகல் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரானார்,
சொத்து மற்றும் ஊழல் சம்பவம் தொடர்பில் வாக்கு மூலத்தினை பெற்றுக்கொள்வதற்காக விடுக்கப்பட்ட அழைப்புக்கமைய விமல் வீரவஞ்ச இலஞ்ச ஊழல் ஒழிப்பு திணைக்களத்திற்கு வருகை தந்தார்.

Post a Comment

0 Comments