போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்ட அவுஸ்திரேலிய பிரஜையான மயூரன் சிவகுமாரின் மரண தண்டனை இந்தோனிசியாவில் உறுதியானது. 2005 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் அவருடன் 13 பேர் போதப்பொருள் கடத்தல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டனர்.2006 ஆம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர் கருணை மனுவொன்றை தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்று அவரது மனு நிராகரிக்கப்பட்டு, மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.
நேற்று அவருடன் மற்றொருவரும் வானூர்தியில் ஏற்றப்பட்டு நுசாகம்பங்கனொன் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரியவருகிறது.
இந்தநிலையில், அவுஸ்திரேலியா அதீத அழுத்தத்தைப் பிரயோகிக்காதவிடத்து இந்த வார இறுதிக்குள் இந்த மரண தண்டனைகள் நிறைவேற்றுப்பட்டுவிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர், மரண தண்டனை தொடர்பில் தங்களது அரசு தங்களினாலான அழுத்தத்தைக் கொடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
பாலி-9” என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் ஒன்பது பேரடங்கிய குழுவில் ஒருவராக இருந்த மயூரன் சிவகுமாரன் சிறையில் இருந்த போது அங்கே பல மாறுதல்களைக் கொண்டு வந்திருந்தார்.
தான் அவுஸ்திரேலிய பல்கலைக்கழகமொன்றில் கலைப்பட்டதாரியாகச் சிறப்புத் தேர்வு பெற்றதோடு, சிறைச்சாலையில் ஆங்கிலம், கணனி, கணனி வரைகலை, கணக்கியல் போன்ற பாடங்களை கற்பித்ததோடு தானிருந்த சிறைப் பகுதிக்கான தலைமை சிறைக்கைதியாக ஏனையவரை வழிநடத்தும் பொறுப்பையும் மேற்கொண்டு வந்தார்.
சிறைச்சாலையில் அவர் கைதிகளுக்கிடையில் பல முன்னேற்றங்களை செய்ததுடன் பல கைதிகளுக்கு எதிர்கால முன்னேற்றத்துக்கான கற்கைநெறிகளை மேற்கொண்டார் என அறியப்படுகிறது.

0 Comments