சமாதான சூழ்நிலையில் அதாவது யுத்தத்திற்குப் பின்னர் நாட்டை கட்டியெழுப்புதல், அபிவிருத்தி செய்தல், பொருளாதாரத்தை மேம்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் இலங்கைக்கு சகல வழிகளிலும் அர்ப்பணிப்புடன் தமது ஒத்துழைப்புக்களை வழங்க மலேசியா முன்வந்துள்ளது.
இலங்கைக்கும் மலேசியாவுக்கு இடையிலான உறவு மிகவும் பலமானது. இந்த இரு தரப்பு உறவுகளும்; தொடர்ந்தும் பேணப்படும் என்று இலங்கைக்கான மலேசியா உயர்ஸ்தானிகர் அஸ்மி செய்னுதீன், கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் சந்திப்பின் போது தெரிவித்துள்ளாா்.


0 Comments