Ticker

6/recent/ticker-posts

சரத்பொன்சேகா நிரபராதியாம்!

கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது ராணுவத்தினர் 10 பேரை அரச பணிகளில் இருந்து சூழ்ச்சிகளுக்காக பயன்படுத்தியதாக குற்றம்சுமத்தப்பட்ட ஜெனரல் சரத்பொன்சேகா நிரபராதியாக அறிவிக்கபபட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா தென்னகோன் இந்த உத்தரவை விடுத்துள்ளார்.

சரத்பொன்சேகா மற்றும் அவரது செயலாளர் சேனக சில்வா ஆகியோர் இவ்வாறு குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டு நிரபராதிகளாக அறிவிக்கப்படடனர்.
4 வருட கால விசாரணைகளில் பின்னர் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது ராணுவத்திலிருந்து வெளியேறிய 10 சிப்பாய்களை வேதனம் மற்றும் இருப்பிடம் வழங்கி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக சூழ்ச்சி மேற்கொண்டதாக அவர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டிருந்தது.

Post a Comment

0 Comments