Ticker

6/recent/ticker-posts

ராஜபக்ஷக்களின் ஒரு பில்லியன் டொலர் பணம் டுபாய் வங்கியில் !

மஹிந்த ராஜபக்ஷக்களின் ஒரு பில்லியன் டொலர் பணம் டுபாய் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதை இது தொடா்பான விசாரணைகளில் இருந்து அறியவருவதாக The Economic Times ஊடகம் செய்தி வெளியிட்டுட்டிருப்பதாக சிங்கள  இணையதள மொன்று தகவல் வெளியிட்டிருக்கிறது.
டுபாய் வங்கிகளில் மஹிந்த குடும்பத்தாரும் அவரது ஆதரவாளர்களும் மறைத்து வைத்துள்ள இரண்டு பில்லியன் டொலர் பணம் குறித்து விசாரணை நடத்த உதவிகளை வழங்குமாறு இந்தியாவிடம் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது. 

மற்றும்  சென். மாட்டின் தீவு, ஹொங்கொங், சீசெல்ஸ் போன்ற நாடுகளிலும் ராஜபக்ஷக்களின் பணம் வைப்பிலிடப்பட்டிருப்பதாக அறிய வருகிறது.

மூன்று கணக்குகளில் இந்தப் பணம் வைப்புச்செய்யப்பட்டுள்ளது.
ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் ஒருவர் மட்டும் ஒரு பில்லியன் டொலர் பணத்தை வைப்புச் செய்துள்ளார்.

ராஜபக்ஷ குடும்பத்திற்கு நெருக்கமான இருவர் தலா 500 மில்லியன் டொலர் என்ற அடிப்படையில் வைப்புச் செய்துள்ளனர்.

Post a Comment

0 Comments