கொழும்பிலுள்ள இரண்டு பிரபல பாடசாலைகளான டீ.எஸ். சேனாநாயக்க கல்லூாி மற்றும் மகாநாம கல்லூாி அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின்போது ரசிகர்களுக்கு இடையே நேற்று ஏற்பட்ட மோதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர கூறியுள்ளார்.
கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் இறுதிப் பகுதியில் சிலர் மைதானத்திற்குள் பிரவேசித்ததை அடுத்து இந்த மோதல் ஏற்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் சம்பவ இடத்திற்கு விரைந்த கலகத்தடுப்பு பொலிஸார் மோதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்,
இதேவேளை மோதலில் காயமடைந்த ஆறு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவர்களில் இருவர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர்.
வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் நால்வரில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தேசிய வைத்தியசாலையில் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.

0 Comments